தமது மனைவிமார் தொடர்பான விதிமுறையை மீறிய இந்திய சிரேஷ்ட வீரர்…! ஐ.சி.சி அதிருப்தி..!

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிவீரரின் மனைவி குறிப்பிட்ட நாட்களிற்கே தனது கணவருடன் தங்கியிருக்கலாம் என்ற விதிமுறை உலககிண்ணத்தின் போது மீறப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிருப்தியடைந்துள்ளது.சிரேஸ்ட வீரர் ஒருவரே உலககிண்ணத்தின் போது இந்த விதிமுறையை மீறியுள்ளார்.

மே 3 ம் திகதி இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் நிர்வாகிகளின் கூட்டத்தின் போது குறிப்பிட்ட சிரேஸ்ட வீரர்  அனுமதிக்கப்பட்ட நாட்களிற்கு அதிகமாக தனது மனைவி தன்னுடன் தங்கியிருப்பதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இந்த வேண்டுகோளை  அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.இந்நிலையில், குறிப்பிட்ட சிரேஸ்ட வீரரின் மனைவி உலககிண்ண போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தனது கணவருடன் இணைந்துகொண்டுள்ளார் உலக கிண்ணப்போட்டிகள் முடிவடையும் அவருடன் இருந்துள்ளார் என  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அதிருப்தியடைந்துள்ளது.இதேவேளை ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற கூட்டத்தில், ஐசிசி தொடரின் போது வீரர்கள் முதல் 20 நாட்களிற்கு தங்கள் மனைவிமார்களை அழைத்து செல்ல முடியாது என்ற நிபந்தனையை வீரர்களுடனான ஒப்பந்தத்தில் இணைக்கவேண்டும் என ரவிசாஸ்திரியும் விராட்கோலியும்  வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும், அணியின் பேருந்தில் பயணிப்பதற்கு வீரர்களின் மனைவிமார்களிற்கு அனுமதியளிக்க கூடாது எனவும் விராட்கோலியும் ரவிசாஸ்திரியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்பின்னரே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியதாகவும் அது மீறப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharing is caring!