தமிழக அணி தோல்வி

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் பாபா இந்திரஜித் சதம் வீணானது.

விஜய் ஹசாரே டிராபிஉள்ளூர் தொடர்முக்கிய நகரங்களில் நடக்கிறது.சென்னையில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ஜார்க்கண்ட், தமிழகம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜார்க்கண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இஷான் விளாசல்

ஜார்க்கண்ட் அணிக்கு ஆனந்த் சிங் (52), கேப்டன் இஷான் கிஷான் (85) அரை சதம் அடித்தனர். விராத் சிங் 48 ரன்களில் திரும்பினார். சவுரப் திவாரியும் (54) விளாசி ‘ஸ்கோரை’ உயர்த்தினார். வருண் சக்ரவதி ‘சுழலில்’ உட்கர்ஸ் சிங் (1), மோனு குமார் (0) ஏமாற்றினர். ஜார்க்கண்ட் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்தது. தமிழகம் சார்பில் அதிகபட்சமாக வருண் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திரஜித் ஆறுதல்

சற்று கடின இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு ஜெகதீசன் (2), கவுசிக் காந்தி (4) ஒற்றை இலக்கில் திரும்பினர். அனுகுல் ராய் பந்தில் பாபா அபராஜித் (38) சிக்கினார். அபினவ் முகுந்த் (63) அரை சதம் கடந்தார். அபாரமாக விளையாடிய கேப்டன் பாபா இந்திரஜித் (101) சதம் விளாசினார். பால்சந்தர் அனிருத் (46) கைகொடுத்தபோதும், வெற்றிக்கு போதவில்லை. தமிழக அணி 49.5 ஓவரில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது.

Sharing is caring!