தமிழன் நடராஜனின் வீடியோவை வெளியிட்டு பெருமிதப்பட்ட ஷேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான ஷேவாக், அவுஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து சிலிர்த்து போயுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரை முடித்து கொண்டு இந்திய அணி நாடு திரும்பியது.

அந்த அணியை சேர்ந்த தமிழக வீரரான நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார்.

அப்போது அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில், இது தான் இந்தியா! இங்கே கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல.

எங்களுக்கு கிரிக்கெட் அதுக்கும் மேல. நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் பெருத்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன ஒரு அற்புதமான கதை அவருடையது என ஷேவாக் அதற்கு கேப்ஷன் போட்டுள்ளார். கூடவே நடராஜன் சாரட் வண்டியில் வலம் வரும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Sharing is caring!