தமிழன் நடராஜன் நன்றாக பந்துவீசினாலும் இப்படி செயல்படுவாரா?

இந்திய அணியை சேர்ந்த தமிழக வீரர் நடராஜனுக்கு வெற்றி பெறக்கூடிய திறமை இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அப்படி செயல்படுவாரா என்பது தெரியாது என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டேவிட் வார்னர் கூறுகையில், நடராஜன் டி20, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் எவ்வாறு பந்துவீசுவார் எனத் தெரியாது.

வெள்ளைப்பந்தில் பந்துவீசுவதற்கும், சிவப்பு பந்தில் பந்துவீசுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்தியாவில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் நடராஜன் பந்துவீசியது குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்கும், புள்ளிவிவரங்களை அறிந்திருப்பீர்கள் என்பதால், நான் சொல்ல வேண்டியது இல்லை.

லைன், லென்த்தில் நடராஜன் பந்துவீசுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து ஓவர்களில் அதேபோன்ற துல்லியத்தன்மையுடன் வீச முடியுமா, சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது.

முகமது சிராஜ் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். ரஞ்சிக் கோப்பையில் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டார் என்பதும் தெரியும். அந்த அனுபவத்தால் தொடர்ந்து சிராஜ் பந்துவீசுகிறார்.

சிராஜ் எவ்வாறு அறிமுகப் போட்டியி்ல் சிறப்பாகப் பந்துவீசினாரோ அதேபோன்று நடராஜனும் அறிமுகம் போட்டியில் பந்துவீசுவாரா எனத் தெரியாது. ஆனால் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Sharing is caring!