தலைவர் தினேஸ் சந்திமால் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கமுடியாத நிலை

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், எதிர்வரும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

20 க்கு 20 லீக் போட்டியில், பிடியெடுப்பின்போது, ஏற்பட்ட உபாதை காரணமாக, ஆசிய போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சந்திமாலின் உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டநிலையில், அவருக்கு போட்டிகளில் விளையாடுவதற்கான உடற்தகுதி இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் 14 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 5 நாட்களில் ஆரம்பமாகவுள்ளன.

இதற்காக பங்கேற்கும் இலங்கை குழாம் கடந்த முதலாம் திகதி அறிவிக்கப்பட்டதுடன், 16 பேர் கொண்ட அணியில் தினேஷ் சந்திமாலின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!