தாதா பிசிசிஐ-யின் அடுத்த தலைவர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த அனுராக் தாகூரை, உச்சநீதிமன்றம் பதவியில் இருந்து தூக்கியது. அதன் பின் நீதிபதி லோதா குழு பரிந்துரைத்த நிர்வாகிகள் கீழ் தற்போது பிசிசிஐ இயங்கி வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட நிறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிசிசிஐயின் தலைவராக நியமிக்கப்படுபவர்களுக்கு என சில தகுதிகளை நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன்படி கங்குலி இருப்பதால் அவர் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டக்காரர் சவுரவ் தற்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார். இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, ஐபிஎல் ஒழுங்கமர்வு குழு உறுப்பினர், கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளார். கங்குலிக்கு மூத்த வீரர்கள் பலரின் ஆதரவும் இருப்பதால் அவர் தலைவராவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!