தானிய வகைகளுக்கான வரி அதிகரிப்பு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தானிய வகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 2 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த தானியங்கள் உலர்த்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும்போது இந்த வரியை விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சில இறக்குமதியாளர்கள், தானிய வகைகளுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியிலிருந்து விடுபடுவதற்காக அவற்றை உலர்த்தி கொண்டுவருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், உலர்த்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட தானியங்களுக்கான வரியை 2 மடங்காக வரியை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!