தென்னாபிரிக்க அணித்தலைவர் மார்க்ரமிற்கு அபராதம்

கடந்த 10ம் தேதி இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் நான்காவது ஒருநாள் போட்டியில் மோதின. இதில், தென் ஆப்பிரிக்கா அணி, டக்வர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது. இருப்பினும், ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், நான்காவது ஒருநாள் போட்டியின் போது, பந்துவீச்சை தாமதகமாக வீசியதற்காக தென் ஆப்பிரிக்கா அணிக்கு, ஐசிசி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, போட்டி கட்டணத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா கேப்டனுக்கு 20 சதவீதமும், சக அணி வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!