தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியிலுள்ள வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இரு வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி தங்கள் வீரர்களுக்கான பயிற்சி முகாமை கடந்த 18-ஆம் திகதி முதல் 20-ஆம் திகதி வரை நடத்துகிறது. இந்த பயிற்சி அணியின் அடையாளம், சூழல், இலக்குகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும், தயாராகும் விதமாக நடத்தப்படுகிறது.

இதில் வீரர்கள், அணியின் உதவியாளர்கள் , பயிற்சியாளர் என 50 பேர் பங்கேற்றுள்ளனர். பயிற்சி தொடங்கும் முன் வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த கொரோனாபரிசோதனையில் இரு வீரர்களுக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியி்ட்ட அறிவிப்பில் கடந்த 18-ஆம் திகதி முதல் வீரர்களுக்கு, பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 50 பேர் பங்கேற்றுவரும் கலாச்சார பயிற்சி முகாமில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இரு வீரர்களுக்கு மட்டும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பரிசோதனை என்பது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும், அமைப்புக்குகட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டது.

இந்த இரு வீரர்களுக்கு மாற்றாக எந்த வீரரும் சேர்க்கப்படவில்லை. இந்த வீரர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு , சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் காணொலி மூலம் பயிறச்சியில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரி்க்காவில் மீண்டும் இனவெறிப்பிரச்சாரம் தூண்டப்படுகிறது. கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக ஒருதரப்பினரும், வெள்ளையினத்தவருக்கு ஆதரவாக ஒருதரப்பினரும் பரிவினையோடு பிரச்சாரம் செய்கின்றனர்.

இதைத் தடுக்கும் வகையிலும், அணிக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் வரக்கூடாது என்பதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

Sharing is caring!