தென் கொரியாவை வீழ்த்திய மெக்சிகோ!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து மெக்சிகோ அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் கார்லஸ் வெலா ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 66-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஜேவியர் ஹெமாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரியா அணியின் சான் ஹியூங் மின் 93-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது.

Sharing is caring!