தெரியாம நடந்து போச்சு.. அதுக்கு இவ்ளோ அபராதமா?

அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் ஒரு போட்டியில் பட்டியலிலேயே இல்லாத ஒரு வீராங்கனையை போட்டியில் களமிறக்கியது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.

ஆனால் அந்த அணியே தவறை உணர்ந்து தொடர் நிர்வாகத்திடம் தங்கள் தவறை சுட்டிக் காட்டியது. இருப்பினும், அந்த அணிக்கு 18.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது பிக் பாஷ் லீக் நிர்வாகம்.

அவுஸ்திரேலியாவில் மகளிருக்கான பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை சிட்னி சிக்ஸர்ஸ் – மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஹெய்லே சில்வர் ஹோல்ம்ஸ் என்ற வேகப் பந்துவீச்சாளர் பெயர் இடம் பெற்று இருந்தது. அவர் காயம் காரணமாக சில போட்டிகளுக்கு முன் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

அவரை அணியில் சேர்க்க சிட்னி சிக்ஸர்ஸ் ஒப்புதல் பெறாத நிலையில் அவரை மெல்போர்ன் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கியது.

போட்டி துவங்கிய சில நிமிடங்களில் அந்த அணி இந்த தவறை தானே ஒப்புக் கொண்டது.

மட்டுமின்றி, அந்த வீராங்கணையை விளையாட்டில் ஈடுபடுத்தவில்லை. இருப்பினும், அந்த தவறால் அந்த அணிக்கு 18.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தானே தவறை ஒப்புக்கொண்டதால், அபராதத் தொகையில் 11 லட்சத்தை 12 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் கருணை காட்டியது தொடர் நிர்வாகம்.

Sharing is caring!