தேசிய கிரிக்கட் அணியில் இலங்கை வீரர்

இலங்கை தேசிய மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வட மாகாணத்தின் முதல் வீரர் என்ற சிறப்பை விஜயகாந்த் வியாஷ்காந்த் பெற்றுள்ளார்.

இந்திய 19 வயதிற்குட்பட்ட அணிக்கு எதிராக இன்று ஆரம்பமான இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் அவர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்திய 19 வயதிற்குட்பட்டோர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் குவித்திருந்தது.

அதர்வா டெய்ட், பவன் சஹா ஆகியோர் தலா 177 ஓட்டங்களைக் குவித்தனர்.

அதர்வா டெய்டின் விக்கெட் வட மாகாண வீரரான விஜயகாந்த் வியாஷ்காந்தின் பந்து வீச்சில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!