தேசிய மட்டத்தில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு -இரண்டு தங்கப்பதக்கம்!!

தேசிய மட்டப் பளுதூக்கல் போட்டியில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி 2 தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

கேகாலை ராஜகிரிய மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் வி.ஆர்ஷிகா 71 கிலோ எடைப் பிரிவில் 175 கிலோ பளுவை தூக்கி தங்கப் பதக்கத்தையும், ஏ.சானிஜா 71 கிலோ எடைப் பிரிவில் 92 கிலோ பளுவை தூக்கி தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.

Sharing is caring!