தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

லாஹூர் – கடாபி மைதானத்தில் ​நேற்று (09) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைப் பெற்றது.

அறிமுக சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் விளையாடிய ஓஷத பெர்னாண்டோ 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 78 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றி இலக்கான 148 ஓட்டங்களை நோக்கிப் பதிலளித்தாடிய பாகிஸ்தான், முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது.

அதிகபட்சமாக ஹாரிஸ் சொஹைல் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

மூன்றாவது போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரராக வனிந்து ஹசரங்க தெரிவானார்.

Sharing is caring!