தொடரை வென்றது நியூஸிலாந்து: 31 வருடங்களுக்கு பிறகு இந்தியக் கிரிக்கெட் அணி வைட் வோஷ்!

இந்தியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, நியூஸிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

மவுண்கானுய் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது இந்தியா அணி சார்பில், பிரீத்வி ஷா 40 ஓட்டங்களையும், மாயங் அகர்வால் 1 ஓட்டத்தினையும், விராட் கோஹ்லி 9 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லோகேஷ் ராகுல் 112 ஓட்டங்களையும், மணீஷ் பான்டே 42 ஓட்டங்களையும், சர்துல் தாகூர் 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ரவீந்திர ஜடேஜா 8 ஓட்டங்களுடனும், நவ்தீப் சைனி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ஹமீஷ் பென்னட் 4 விக்கெட்டுகளையும், கெய்ல் ஜேமீஸன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 47.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், மார்டின் கப்டில் 66 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோல்ஸ் 80 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 22 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 12 ஓட்டங்களையும் ஜேம்ஸ் நீஷம் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டொம் லாதம் 32 ஓட்டங்களுடனும், கொலின் டி கிராண்ட்ஹோம் 58 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும், சர்துல் தாகூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு பிறகு இந்தியக் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் வைட் வோஷ் ஆகியுள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 103 பந்துகளில் 9 பவுண்ரிகள் அடங்களாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹென்ரி நிக்கோல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் நாயகனாக, அதிகபட்ச ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான ரோஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.

Sharing is caring!