தொடர்ந்தும் முதலிடத்தில் விலாட் கோலி

ஐசிசி-ன் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி நம்பர் ஒன் இடத்தில் நீடித்து வருகிறார். 911 புள்ளிகளுடன் வலுவான நிலையில் முதல் இடத்தை தனதாக்கி வைத்துள்ளார்.

இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், புதிய ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அணிகள் வரிசையில் தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், நியூசிலாந்து 3-வது இடத்தை பிடித்தது. இலங்கை 8-வது இடத்தில் தொடர்கிறது. இங்கிலாந்து மற்றும் இந்தியா, முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

இலங்கைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட டுமினி, 227 ரன்களுடன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இதன் மூலம், 11 இடங்கள் ஏற்றம் கண்டு, பேட்ஸ்மேன் வரிசையில் 40-வது இடத்தை பிடித்தார். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில், 10 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தில் இருக்கிறார்.

213 ரன்கள் விளாசிய குயின்டன் டி காக், 7-வது இடத்தை மீண்டும் பெற்றார். பாப் டு பிளேஸிஸ் 3 இடங்கள் இறங்கி 11-வது இடத்தையும், 2 இடங்கள் இறங்கி ஹஷிம் ஆம்லா 14-வது இடத்தையும் பெற்றனர்.

பந்துவீச்சாளர்களில், லுங்கி ன்கிடி, 57 இடங்கள் முன்னேறி 88-வது இடத்தை பிடித்தார். தொடரில் 14 விக்கெட்கள் கைப்பற்றிய இலங்கையின் அகில தனஞ்ஜய, 22 இடங்கள் முன்னேற்றம் கண்டு 600 புள்ளிகளுடன் 21-வது இடத்தை பிடித்துள்ளார். அவருடைய கேரியரில், மிக உயர்ந்த தரவரிசைப் புள்ளி இதுவாகும்.

வேகப்பந்து வீச்சாளர் திசாரா பெரேரா 4 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தை பிடித்தார். ஆல்-ரவுண்டர்களில் 7 இடம் ஏறி 25-வது இடத்தை பெற்றார்.

பேட்ஸ்மேன் குசல் பெரேரா, 16 இடங்கள் ஏற்றம் கண்டு 66-வது இடத்தை பெற்றுள்ளார். 235 ரன் அடித்த மேத்தியூஸ், 2 இடம் ஏறி 25-வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் பேட்டிங், பந்துவீச்சு, ஆல்-ரவுண்டர் ஆகிய வரிசைகள் முறையே முதலிடத்தில் நீடிக்கின்றனர்.

Sharing is caring!