தொடர்ந்து 21 மெய்டன் ஓவர் வீசி வரலாறு சாதனை படைத்த இந்திய வீரர் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் தொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசிய சாதனையாளருமான பாபு நட்கர்னி தனது 86 வயதில் வயது முதிர்வு காரணமாக மும்பையில் நேற்று காலமானார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான பாபு நட்கர்னி சிக்கனமாக பந்து வீசுவதில் கில்லாடி. சென்னையில் நடந்த டெஸ்டில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார். அந்த இன்னிங்சில் அவர் 32 ஓவர்கள் பந்து வீசி 27 மெய்டனுடன் வெறும் 5 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்தியாவிற்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1,414 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், 7 அரைசதம் அடித்துள்ளார்.88 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட்  வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின், விவிஎஸ் லக்‌ஷமன் ஆகிய வீரர்கள் பாபு நட்கர்னி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

Sharing is caring!