தொடர் வெற்றிகளை குவிக்கும் இலங்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 1ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் தொடருக்கு பின்னர் நடைபெறவுள்ள டி 20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் ஜனித் பெரேரா, சேஹான் ஜெயசூரிய, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சய டிசில்வா, திஸார பெரேரா, தசூன் சானக்க, வர்னிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகான், இசுறு உதான, நுவான் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

முதல் டி20 போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 6 ஆம் திகதியும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Sharing is caring!