தொட்டால் சிணுங்கி போல நான் நடிக்கிறேனா பாஸ் ?: திருப்பி தாக்கிய நெய்மர்

உலக கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் ரவுண்டில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோற்று வெளியேறியது. அந்த ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் மிகுயெல் லயுன், தேவையில்லாமல் நெய்மரின் ஆபரேஷன் நடந்த கணுக்கால் மீது தன் ஷூவால் மிதித்தார்.

நெய்மர் வலியால் சுருண்டார். ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரணி வீரர்கள் யாராவது உரசினாலே அப்படியே 5 ரவுண்டு பல்டி அடிப்பார்.

இப்படி நெய்மர் மீது பொதுவாகவே ஒரு குற்றச் சாட்டு உண்டு. இந்த நிலையில் இப்பொது உண்மையிலே வலி பொறுக்க முடியாமல் சுருண்டு விழுந்த சம்பவத்தினை அவர் வலியாக பார்க்காமல் நெய்மர் நடிக்கிறார் என உலகம் முழுவதும் செய்தி தீயாக பரவியது.
இது குறித்து பல்வேறு வீரர்கள் அவர்களது டிவிட்டர் பக்கங்களில் நெய்மரை கலாய்த்து எடுத்துள்ளனர்.

நெய்மரால் பிரேசில் அணி விரைவில் நாடு திரும்பும். ஒரு கால்பந்து வீரராக இருந்து கொண்டு அவர் மோசமான காரணங்களை சொல்லி பிரச்சனை செய்கிறார்.

அவர் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

ஆனால் லேசாக தொட்டால் கூட அழுது கண்ணீர் வடிக்கும் நெய்மர் எப்படி ரோல்மாடலாக இருக்க முடியும்? என்றும் ‘இனி வரும் போட்டிகளில் நெய்மருக்கு காயம் ஏற்பட்டால் தூக்கி செல்வதற்கு மருத்துவ ஹெலிகாப்டர் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கும், எனவும் அடி வாங்கிய ஜெர்மன் வீரர் பாஸ்டியன் ஸ்க்வெய்ன்ஸ்டெய்ஜருக்கும் பிரேசிலின் நெய்மருக்கும் இதுதான் வித்தியாசம் என முகத்தில் ரத்தம் வழிய ஜெர்மன் வீரர் பாஸ்டியன் மைதானத்தில் இருக்கும் படத்தை போட்டும், மறுபக்கம் சக வீரர் நெய்மரை தொட்டதும் அவர் தொட்டால் சிணுங்கி போல சுருண்டு விழுவது போல போட்டு நெய்மரை கதற விட்டுள்ளனர் பல்வேறு நாட்டு கால்பந்து வீரர்கள்.

இதனால் பயங்கர அப்செட் ஆன நெய்மர் இவை என்னை கவிழ்ப்பதற்காகக் கூறப்படுவதேயன்றி வேறில்லை.

நான் விமர்சனத்தை மதிப்பவனில்லை, பாராட்டுதலையும் கூட நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏனெனில் இது ஒரு விளையாட்டு வீரனின் அணுகுமுறையில் தாக்கம் செலுத்தும்.
கடந்த 2 போட்டிகளாக நான் செய்தியாளர்களைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன்.

காரணம் அதிகம்பேர் ஏதேதோ பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பதற்றமடைகின்றனர்.

அவர்கள்தான் நடிக்கிறார்களோ?.

என் சகாக்களுடன் வெற்றிபெறவே இங்கு வந்துள்ளேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.
உலக கோப்பை போட்டி நடைபெறும் மைதானத்தில் பொழுது போக்கு அம்சங்கள் குறைவாக இருப்பதால் இது போன்ற சம்பவங்களால் நன்றாக பொழுது போவதாக இதையும் பலர் கிண்டல் செய்துள்ளனர்.

Sharing is caring!