தோனியின் கீப்பிங் கிளவுசில் ராணுவ முத்திரை: நீக்க ஐசிசி அறிவுறுத்தல்

தோனியின் கீப்பிங் கிளவுசில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான  நேற்றைய போட்டியில்,  இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது கீப்பிங் கிளவுசில், இந்திய சிறப்பு துணை ராணுவப்படையின் முத்திரையை பயன்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில்,  தோனியின் கீப்பிங் கிளவுசில் உள்ள ராணுவ முத்திரையை  நீக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

Sharing is caring!