தோனி நடுவர்களிடம் இருந்து பந்தை வாங்கி சென்றது பெரும் சர்ச்சை

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி தொடரையும் இழந்தது. இப்போட்டியின் முடிவில் தோனி நடுவர்களிடம் இருந்து பந்தை வாங்கி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் இந்த செயல் செயல் ஓய்வுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த 2 போட்டியிலும் படுதோல்வி அடைந்து 1-2 என தொடரை இழந்தது.

இதில் கடைசி ஒருநாள் போட்டி முடிந்து வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பியபோது போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தை தோனி வாங்கிக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் வேகமாக மைதானத்துக்கு சென்று ஸ்டம்புகளை எடுத்து வந்தார். தோனி ஏன் இப்படி செய்தார் என சக வீரர்களுக்கு அப்போது புரியவில்லை. பின்னர் அன்று மாலை ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தோனி ஓய்வு முடிவை அறிவித்தார். தற்போது பந்தை வாங்கி சென்றதும் ஓய்வுக்கான அறிகுறியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Sharing is caring!