தோல்வியை மறந்து பெனால்டி ஷூட்டை ரசித்த இங்கிலாந்து வீரர்கள்!

டி20 போட்டியில் கண்ட தோல்வியை மறந்து, கால்பந்து அணியின் பெனால்டி ஷூட்அவுட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடியவும், இங்கிலாந்து – கொலம்பியா மோதிய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்று ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

இந்தியாவிற்கு எதிரான தோல்வியை பொறுட்படுத்தாமல் கால்பந்து போட்டியின் பெனால்டி ஷூட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள்.

Sharing is caring!