நடப்பு ஆண்டின் ஐ.பி.ல். ரி-20 தொடரில் புதிய விதிமுறைகள்: இரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அந்த ஏலத்தில் ஓவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்தது.

இதற்கிடையில் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகும் புதிய விதிமுறைகள் குறித்து. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

இத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துவதற்காக ஐ.பி.எல். நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதன்போது கங்குலி விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் கூறிய கருத்துக்கள் இவை.

‘ஐ.பி.எல். தொடர் தொடங்கும் இரு நேரத்திலும் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. போட்டியை இரவு 7.30 மணிக்குத் ஆரம்பமாவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், வழக்கம் போல் மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும்தான் போட்டி தொடங்கும்.

இந்த முறை ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. நோ-பாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகிறது. அதேபோல டெஸ்ட் போட்டியில் இருப்பது போன்று கன்கஸன் மாற்று வீரரைக் களமிறக்கும் முறை அறிமுகமாகிறது. அதாவது ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரைக் களமிறக்கி விளையாட வைக்கலாம்.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை எங்கு நடத்தப்போகிறார்கள் என்று பல்வேறு யூகங்கள் எழுந்தன. குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்தப்படும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் வரும் மே 29ஆம் திகதி மும்பையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடக்கும். அதில் மாற்றமில்லை.
போட்டியின் அட்டவணை, போட்டிகள் தொடங்குவது, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா விரைவில் வெளியிடுவார்.

இது தவிர ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அதற்கு முன்பாக அகமதாபாத் மைதானம் அமைப்பதற்காக ஒல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்பட உள்ளது. அது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும். பாண்ட்யாவின் உடல்நிலை முழுமையாகக் குணமடையவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் பயிற்சி நிலையத்தில் தங்கி இருக்கிறார். அவர் குணமடைந்து விளையாடுவதற்குச் சிறிது காலமாகும்’ என கூறினார்.
………

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தியாவில் சிறந்த உள்ளூர் வீரர்களை இனங்காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடர், சர்வதேச வீரர்களின் வருகையால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தப் போட்டித் தொடருக்கான எதிர்பார்ப்பு நீண்டுக் கொண்டே தான் செல்கின்றது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 ஐ.பி.எல். தொடர்களில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் சம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது.

ராஜஸ்தான் றோயல்ஸ், டெக்கன் சார்ஜஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒருமுறையும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 ஐ.பி.எல். தொடர்களில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் சம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது.

ராஜஸ்தான் றோயல்ஸ், டெக்கன் சார்ஜஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒருமுறையும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

Sharing is caring!