நடாலை தோற்கடித்து ஜோகோவிச் சாம்பியன்

மெல்போர்ன்:
நடாலை தோற்கடித்து ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்  கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6-3, 6-2, 6-3 என, ஸ்பெயினின் நடாலை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-1’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர்.

இரண்டு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இது, ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் கைப்பற்றிய 7வது பட்டம். ஏற்கனவே 2008, 2011-13, 2015-16ல் கோப்பை வென்றிருந்தார். தவிர இது, ஜோகோவிச் வென்ற 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!