நாக்அவுட் ரவுண்டில் தோல்வி எதிரொலி ஜப்பான் அணி கேப்டன் விலகல்

நாக்அவுட் ரவுண்டில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்ததையடுத்து இனிமேல் விளையாட மாட்டேன் என ஜப்பான் அணியின் கேப்டன் அறிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் அபாரமாக ஆடி வந்த ஜப்பான் அணி நாக் அவுட் ரவுண்டில் பெல்ஜியம் அணியுடன் கடுமையாக போராடி கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு அந்த அணியின் கேப்டன் மகோட்டோ ஹசிபி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 34 வயதான மகோட்டோ ஜப்பான் அணிக்காக 102 ஆட்டங்களில் விளையாடி 2 கோல் அடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: இந்த உலக கோப்பை போட்டிக்குப் பிறகு நான் தேசிய அணிக்காக விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

உலக கோப்பை போட்டியில் எங்களது அணி தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பெல்ஜியம் அணியுடனான போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தோம்.

கடைசி ஒரு நிமிடத்தில் எங்களது அணியின் தலை எழுத்தே மாறிவிட்டது. 12 ஆண்டுகளாக ஜப்பான் அணியில் ஆடுகிறேன்.

இனிமேல் ஆட மாட்டேன் என கூறியுள்ளார். தோல்வி அடைந்த மறுநாளே ஜப்பான் அணியின் கேப்டன் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அந்த அணியிலிருந்து விலகியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

.

Sharing is caring!