நாட்டின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கத்தை வென்று நேற்றுடன் 20 வருடங்கள் நிறைவு!!

நாட்டின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கத்தை வென்று நேற்றுடன் 20 வருடங்கள் நிறைவடைகின்றன.

2000 ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் கலந்து கொண்டு பதக்கத்தை வென்றார்.

இருப்பினும் தங்கப்பதக்கத்தை பெற்ற அமெரிக்க குறுந்தூர ஓட்ட வீராங்கனை மெரியன் ஜோன்ஸ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை அருந்தியது உறுதிசெய்யப்பட்டமையினால் அவருக்கான தங்க பதக்கத்தை  இழந்தார்.

இதற்கு அமைவாக வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்ற பஹமாஸில் டேவிஸ் தோமசுக்கு 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டில் 200 மீட்டர் ஓட்டத்திற்காக தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த போட்டியில் வெள்ளி பதக்கம் இலங்கையை சேர்ந்த சுசந்திக்கா ஜயசிங்கவிற்கு வழங்கப்பட்டது.

Sharing is caring!