நாளை நாக் அவுட் ஆட்டத்தில் அடித்து நொறுக்க காத்திருக்கும் அர்ஜென்டினா: பிழைக்குமா பிரான்ஸ்?

உலகெங்கும் உள்ள மிக பிரபலமான 5 கால்பந்து கூட்டமைப்புகள் பல்வேறு நாடுகளில் நடத்திய தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற அணிகளே இந்த உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றன. முதலில் ஐரோப்பிய கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் தகுதி பெற்று 14 நாடுகள் உலகக் கோப்பை போட்டிக்கு வந்தன.

ஆசியா கண்டத்தில் 5, ஆப்பிரிக்காவில் இருந்து 5, தென் அமெரிக்காவில் இருந்து 5, வட அமெரிக்காவில் இருந்து 3 நாடுகள் என இந்த உலக கோப்பைக்கு மொத்தம் 31 அணிகள் தகுதி பெற்றன. இதில் ஐரோப்பாவில் இருந்து முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

இதைத் தவிர ரஷ்யா, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், நட்சத்திர வீரர் ரொனால்டோவின் போர்ச்சுகல், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து என 10 ஐரோப்பிய நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதோடு அறிமுக அணிகளான ஐஸ்லாந்து, செர்பியா, போலந்தும் சிறப்பாக விளையாடி வெளியேறின. குறிப்பாக ஐஸ்லாந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதே போல ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா ஆகியவை உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றதோடு சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் பெற்றன.

ஆனால் இந்த கண்டத்தின் துரதிர்ஷ்டம் அனைத்து அணிகளும் வெளியேறின.
இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் நாளை முன்னாள் உலக சாம்பியன் அணிகளான பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. பிரான்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் பவுல் போக்பா, க்லீயான் மாபாபே, அன்டோய்ன் கிரீஸ்மேன் ஆகியோர்தான்.

அதிரடி ஆட்டத்துக்கும், அட்டகாசமாக கோல் போடுவதற்கும் பெயர் பெற்றவர்கள் இந்த மூவர்.

தற்போது சிறந்த ஆட்டத்தை ஹியூகோ லோரிஸ், க்லீயான் மாபாபே வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் பலம் வாய்ந்த அணியான அர்ஜென்டினாவை எதிர்த்து ஆடுகிறார்கள். அதே போல அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸிதான் நம்பிக்கை நாயகன்.

ஐஸ்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி, பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அதேவேளையில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களத்தில் இருந்த இடம் தெரியாமலே இருந்தார்.

தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஈக்வேடார் அணிக்கு எதிராக சாத்தியமே இல்லாத சூழ்நிலையில் அதுவும் பின்தங்கிய நிலையில் ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினா அணியை உலகக் கோப்பைக்குள் அழைத்து வந்திருந்தார் மெஸ்ஸி.

அதுபோன்ற ஒரு மேஜிக்கை தற்போது பிரான்ஸ் அணியிடம் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!