நிதி மோசடி தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த நிதி மோசடி தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இங்கிலாந்து கிரிக்கெட் விஜயத்தின் ஔிபரப்பு உரிமைக்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டியிருந்த 880 மில்லியன் ரூபா, வௌிநாட்டு தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா
நேற்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டினை பரிசீலனை செய்த பொலிஸ் மா அதிபர், விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

Sharing is caring!