நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா பரிசோதனை!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது தனக்கு தொண்டைவலி இருப்பதாக கூறியதால் தனிமைபடுத்தப்பட்டார்.

நேற்று சிட்டினியில் போட்டியில் தோல்வியடைந்த உடனேயே வலது கை வீரரான லோக்கி தனிமைப்படுத்தப்பட்டார். சோதனைக்கு பிறகு குறைந்தது 24 மணிநேரம் அவர் கண்காணிப்பில் இருப்பார்.

“சோதனை முடிவுகள் கிடைத்ததும், அவர் அணிக்கு திரும்புவதை தீர்மானிக்க முடியும்.” என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, லோக்கி பெர்குசன் சோதனைக்குட்படுத்தபட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

Sharing is caring!