நியூஸிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றி

இலங்கையுடனான இருபதுக்கு இருபது போட்டியில் நியூஸிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

180 என்ற வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

16.5 ஓவர்களில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

நியூஸிலாந்து அணியின் முதல் 5 விக்கெட்களும் 55 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

நியூஸிலாந்து அணி சார்பில் ப்ரேஸ்வெல் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றார்.

180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்ரம ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.

11 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இலங்கை அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

சதீர சமரவிக்ரம தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அதிகபட்சமாக திசர பெரேரா 43 ஓட்டங்களைப் பெற்று பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்களும் பிரகாசிக்கத் தவற, இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Sharing is caring!