நியூஸிலாந்து – பங்களாதேஷ் இடையான போட்டி இரத்து

நாளை (16) ஆரம்பமாகவிருந்த நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து கிரைஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதியிலிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் பாதுகாப்புடன் மீண்டும் தங்கியுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரு அணிகளின் இணக்கத்துடன், தொடரின் இறுதிப் போட்டியை இரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 -0 என்ற கணக்கில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

Sharing is caring!