நியூஸிலாந்து 45 ஓட்டங்களினால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

372 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்களை குவித்தது.

அபாரமாக விளையாடிய மார்டின் கப்தில் ஒருநாள் அரங்கில் 14 ஆவது சதத்தை எட்டிய நிலையில் 138 ஓட்டங்களை விளாசினார்.

372 ஓட்டங்கள் இலக்கை ​நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக்க ஜோடி முதல் விக்கெட்க்காக 119 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தது.

பொறுப்புடன் விளையாடிய குசல் ஜனித் பெரேரா 82 பந்துகளில் சதம் கடந்தார்.

எனினும், அவர் துர்திஸ்டவசமாக 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது.

இறுதியில் இலங்கை அணி 326 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழக்க நியூஸிலாந்து அணி 45 ஓட்டங்களினால் வெற்றியை தமதாக்கிக்கொண்டதுடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என முன்னிலையில் உள்ளது.

Sharing is caring!