நீங்க தான் எங்க பிக் பிரதர்… தோனிக்கு கோலி கலக்கல் ட்வீட் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி, தமது 38 -வது பிறந்த நாளை இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ட்விட்டரில் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “சக மனிதர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மரியாதை வெகு சிலருக்கு தான் புரியும்.  உங்களுடன் பல ஆண்டுகளாக நட்பு பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்.  இந்திய அணி வீரர்களுக்கு நீங்கள் தான் பெரிய அண்ணன் (பிக் பிரதர்) மற்றும் எனக்கு எப்போதும் நீங்கள் தான் கேப்டன்” என்று தோனிக்கு தமது உணர்வுப்பூர்வமான வாழ்த்துகளை கோலி தெரிவித்துள்ளார்.

Sharing is caring!