நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டதால் சிறிது பயமாக இருந்தது – விராட் கோலி

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. தொடக்ககட்ட ஆட்டங்கள் துபாயில் நடைபெறவுள்ளதால் இதற்காக வீரர்கள் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பிறகு வலை பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இது குறித்து இவர் கூறுவாதவது, 5 மாதங்களுக்கு வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக பந்தை எதிர்கொண்ட போது, கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட முதலாவது வலைபயிற்சி சிறப்பாகவே இருந்தது.

ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் வலுவான உடல்தகுதியுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.பயிற்சியின் போது பெரிய அளவில் சிரமம் ஏதும் தெரியததால் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடிந்தது.

முறையான உடற்பயிற்சி இல்லாமல் வந்திருந்தால் உடலை எளிதாக அசைத்து ஆடுவது கடினமாக இருந்திருக்கும்.

அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகியோர் முதல் நாளில் நன்றாக பந்தை சரியான பகுதியில் பிட்ச் செய்து நீண்ட நேரம் சிறப்பாக விளையாடினார்கள்.

மேலும் எங்களது பயிற்சி முகாம் நன்றாக தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!