நேரடியாக பங்கேற்கும் தகுதியை இழந்த இலங்கை, வங்க தேசம்

புதுடில்லி:
உலகக் கோப்பை போட்டியில் நேரடியாக பங்கேற்கும் தகுதியை இலங்கையும், வங்க தேசமும் இழந்துள்ளது.

2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. ஐசிசி விதிமுறைப்படி, டி20 தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியும்.

அந்த வகையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்கின்றன. இலங்கையும், வங்கேதசமும் 9 மற்றும் 10 இடங்களில் இருப்பதால் அந்த அணிகள் நேரடியாகப் பங்கேற்கும் தகுதியை இழந்து விட்டன.

2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியன், 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியது இலங்கை அணி. ஆனால், இந்த முறை ஆப்கானிஸ்தான் அணி கூட தகுதி பெற்ற நிலையில், இலங்கை பங்கேற்க முடியாமல் போனது அந்த அணிக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இது குறித்து இலங்கை அணி கேப்டன் ரசித் மலிங்கா கூறுகையில், “ இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. இருப்பினும் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்றார்.

வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறுகையில், இந்த சவாலில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வெல்வோம். ஏன் நேரடியாகத் தகுதிபெற இயலவில்லை எனத் தெரியவில்லை என்றார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!