பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் சிம்பாப்வே அணி அறிவிப்பு!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், விளையாடும் சிம்பாப்வே கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவர் சீன் வில்லியம்ஸ் சொந்த காரணங்களுக்காக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கு பதிலாக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான கிரேக் எர்வீன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உபாதைக் காரணமாக அணியின் முன்னணி வீரர்களான கெய்ல் ஜார்வீஸ் மற்றும் டென்டாய் சடாரா ஆகியோர் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

கிறிஸ் மோபு வேகப்பந்து வீச்சு வரிசை வலுப்படுத்தவுள்ளார். அதேபோல கெவீன் கசுஸா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.
அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

கிரேக் எர்வின் தலைமையிலான அணியில், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகாப்வா, கெவின் கசுசா, டிமிசென் மருமா, பிரின்ஸ் மஸ்வாரே, கிறிஸ்டோபர் மபோஃபு, பிரையன் முட்ஸிங்கன்யாமா, கார்ல் மும்பா, டினோடெண்டா முட்டோம்போட்ஸி, ஐன்ஸ்லி என்ட்லோவ், விக்டர் நயாச்சி, பிரெண்டன் டெய்லர், டொனால்ட் ரிபோனோ, சார்ல்டோன் ட்சுமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிம்பாப்வே அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அங்கு செல்லும் சிம்பாப்வே அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெறுகின்றது. இப்போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி டாக்கா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் அணி தற்போது பாகிஸ்தான் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதற்கு முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை சிம்பாப்வே அணி 0-1 என்ற கணக்கில் இழந்தது.

Sharing is caring!