பங்களாதேஷ் அணியின் புதிய தலைவரானார் தமிம் இக்பால்

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியின் புதிய தலைவராக தமிம் இக்பால் (Tamim Iqbal) பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த வருடம் பங்களாதேஷ் அணியை தமிம் இக்பால், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார்.

கடந்த வாரம் ஸிம்பாப்வேயிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் பங்களாதெஷ் சார்பாக 7000 ஓட்டங்களை கடந்த முதலாவது வீரர் என்ற சிறப்பை தமிம் இக்பால் பெற்றிருந்தார்.

நிறைவுக்கு வந்த ஸிம்பாப்வேயிற்கு எதிரான ஒருநாள் தொடருடன் மொஸ்ரபி மொர்டசா அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!