பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரஸ்ஸல் டொமிங்கோ நியமனம்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, தென்னாபிரிக்காவின் ரஸ்ஸல் டொமிங்கோ, நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ரஸ்ஸல் டொமிங்கோ, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து பங்களாதேஷ் அணியுடன் இணையும் 44 வயதான ரஸ்ஸல் டொமிங்கோ, இதற்கு முன்னதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாராகவும் இருந்துள்ளார்.

அவ்அப்போது முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பங்களாதேஷ் அணி, அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், லீக் சுற்றுகளுடன் வெளியேறியது மட்டுமல்லாமல், புள்ளிப்பட்டியலிலும் 8ஆவது இடம் பிடித்தது.

தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் 606 ஓட்டங்கள் குவித்தும், 11 விக்கெட்டுகள் வீழ்த்தியும் ஷகிப் அல் ஹசன் மட்டுமே சற்று ஆறுதல் அளித்தார். ஏனைய வீரர்கள் ஓரிரு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.

இந்த நிலையில், உலகக்கிண்ண தொடரில் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்ட ஸ்டீவ் ரோட்ஸின், செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறி அவரை அதிரடியாக தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நீக்கியது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 2 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1 வருட பதவிக் காலம் மீதமிருக்கும் நிலையில், அவரை நீக்கி பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!