பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் இரட்டைச்சதம்

ஸிம்பாப்வேயிற்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) அபார இரட்டைச்சதத்தை விளாசியுள்ளார்.

ஸிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஒற்றை டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன.

டாக்காவில் நடைபெறும் போட்டியில் ஸிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 265 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் கிரேக் எர்வினின் அபார சதமடித்தார்.

Nayeem Hasan மற்றும் அபு ஜாயிட் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் சார்பாக அணித்தலைவர் மொமினுல் ஹக் சதமடித்தார்.

அபாரமாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் அரங்கில் மூன்றாவது இரட்டைச்சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

பின்வரிசையில் லிட்டன் தாஸ் அரைச்சதமடித்தார்.

பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 560 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்தியது.

இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த ஸிம்பாப்வே ஓட்டமின்றிய நிலையில் முதல் 2 விக்கெட்களையும் இழந்தது.

போட்டியில் பங்களாதேஷ் 286 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

Sharing is caring!