பனமாவை துவம்சம் செய்த இங்கிலாந்து!

ஹாரி கேன் ஹாட்ரிக்கால் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து 6-1 என பனமாவை துவம்சம் செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அறிமுக அணியான பனாமை எதிர்கொண்டது.

பலம் வாய்ந்த இங்கிலாந்து தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். 45-வது நிமிடம் முடிந்து காயத்திற்கான நேரத்தின் முதல் நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் பாதி நேரத்தில் 5-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கியது. 62-வது நிமிடத்தில் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். ஹாரி கேனின் ஹாட்ரிக் கோலால் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து 6-0 என முன்னிலைப் பெற்றது. 62-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் ஹாரி கேன், லிங்கார்டு உள்பட முன்னணி வீரர்கள் வெளியேறினார்கள்.

அதன்பின் இங்கிலாந்து ஆட்டத்தில் சற்று வேகம் குறைந்தது. இதை பயன்படுத்தி பனாமா 78-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. ப்ரீ ஹிக்கை பயன்படுத்தி அடித்த பந்தை, கோல் எல்லைக்குள் வைத்து பலோய் காலால் உதைத்து கோலாக்கினார்.

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 6-1 என வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றிருந்ததால், இரண்டு வெற்றியுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Sharing is caring!