பனிச்சறுக்கு விளையாட்டின் போது தலைக்கவசம் அணியாமல் இரண்டு வீரர்கள் மரணம்…!!!

கனடாவில் பனிச்சறுக்கு வாகன விளையாட்டில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Manitoba-வ சேர்ந்த இரண்டு வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Ninette பகுதியில் கடந்த 30ஆம் திகதி மதியம் 1.15 மணிக்கு பனிச்சறுக்கு வீரர் தலைக்கவசம் அணியாமல் விளையாட்டில் ஈடுபட்ட நிலையில் மரத்தில் மோதி படுகாயமடைந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதே போல 1ஆம் திகதி காலை 7.35 மணியளவில் Churchill நகரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் பனிச்சறுக்கு வாகன விளையாட்டில் பங்கேற்றார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த வீரரும் தலைக்கவசம் அணியவில்லை. மேலே கூறப்பட்ட தகவலைகளை Manitoba பொலிசார் வெளியிட்டுள்ள நிலையில் இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!