பரிசோதனைக்காக அகில தனஞ்சய இந்தியா பயணம்

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய தமது பந்துவீச்சு தொடர்பிலான பரிசோதனைக்காக இன்று (28) இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

இந்தப் பரிசோதனை சென்னையில் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக தலைமை அதிகாரியான ஜெரோம் ஜெயரத்னவும் இந்த பரிசோதனைக்காக அகில தனஞ்சயவுடன் செல்லவுள்ளார்.

இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சு பயிற்றுநர் ஒருவர் இல்லாததன் காரணமாக ஜெரோம் ஜெயரத்னவுக்கு சென்னைக்கு செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி காலி மைதானத்தில் நிறைவுக்குவந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி சந்தேகமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி தொடர்பில் பரிசோதனை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்தது.

இதுவரையில் 6 டெஸ்ட் போட்டிகளில் 33 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அகில தனஞ்சய, 37 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 51 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

Sharing is caring!