பறி போனது வெண்கல பதக்கம்… வெள்ளைக் கோட்டை தாண்டியதால்

ஜகார்த்தா:
வெள்ளைக்கோட்டை தாண்டியதால் வெண்கல பதக்கம் பறி போனது… பறிபோனது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம் பந்தயத்தில் தமிழக வீரர் வெண்கலம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்குள் பதக்கம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தமிழக வீரர் லக்ஷ்மணன் வெண்கலம் வென்றதாக செய்தி வெளியானது.

ஆனால் இந்த மகிழ்ச்சி சில நிமிடங்களே நீடித்தது. சிறிது நேரத்தில் வீரர் லட்சுமணன் பாதையில் வெள்ளைக்கோட்டை தாண்டியதால் , அவரது பதக்கம் செல்லாது என விளையாட்டு குழுவினர் அறிவித்தனர்.
இதுவரை இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 19 வெண்கலம் உள்ளிட்ட 35 பதக்கங்களை பெற்றுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!