பலருக்கும் தெரியாத சங்கங்காரவின் இன்னுமொரு முகம்…!

இந்த சங்கக்கார..??

இவன் ஒரு தமிழனா…?? இவன் ஒரு நடிகனா….?? இவன் ஒரு அரசியல்வாதியா..?? இவன் ஒரு இந்தியனா..?? இவன் தமிழக மக்களிடத்தில் ஏதும் தேவையுடையவனா..?? இவன் யாருமில்லை..மதங்களைக் கடந்து மனிதநேயத்தை நேசிக்கத் தெரிந்த ஓர் சாதாரண மனிதன்…

சிங்கள ஆட்சியின் கீழே ஓர் சிங்களவனாய் இருந்து கொண்டே தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததோர் தந்தைக்குப் பிறந்த தங்க மகன் இவன்.
யார் இந்த சங்கக்கார…..? விளையாட்டு வீரனாகத் தான், உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருப்பீர்கள்..ஒரு நல்ல மனிதனாய் எத்தனை பேருக்கு தெரியும் ?

தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்று நீதிமன்ற வாசலிலே பேட்டியளித்தவர்.. ஈழத் தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாகும் போது, தனது வீட்டில் சில தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் சங்கக்காரா..குமார் சங்கக்காரா அவர்கள் தமிழ் மக்களுக்காக ரூபாய் 6 லட்சம் (10,000டொலர்) வழங்கி உள்ளார்..

தந்தையார் திரு.சொர்ணகுமாரா.இரத்தம் அப்படிதான் இருக்கும்..திரு.சொர்ணகுமார அவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக சிறை சென்ற ஒரு மாமனிதர்..

ஆயிரம் அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும் கூட, அநீதிக்குத் தலை வணங்காத தர்மத் தாயின் புதல்வன் இவன்.விளையாட்டிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, கரை படியாத கரங்கழுக்கு சொந்தக்காரன் இவன்..அபாரமான சாதனைகள் செய்தும் கூட, அமைதின் இலக்கணமாய்த் திகழும் அற்புத மனம் படைத்தவன் இவன்..தன் பிறந்த நாளை திருவிழாவைப் போல் கொண்டாடிக் களிக்கின்ற சக வீரர்களுக்கு மத்தியில் தானும் இரத்த தானம் செய்து, தன் ரசிகனையும் இரத்த தானம் செய்யச் சொன்ன உத்தமன் இவன்..

இலங்கை வீரர்கள் சென்னை மண்ணை மிதித்தால், கல்லால் அடிப்போம் என்று சொன்ன பரந்த மனம் படைத்த மக்களின் முன்னால்,’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவன் இவன்.

பாடசாலை மாணவர் தொடக்கம், பாமர மக்கள் வரை ஆயிரம் உதவிகள் செய்தும், தன்னை அடையாளம் காட்ட நினைக்காத உத்தமன் இவன்… வாழ்த்துக்கள் சங்கா…. உங்கள் சேவைகள் பார் புகழ தொடரட்டும்… இறைவன் உங்கள் என்றும் துணையிருப்பான்…

Sharing is caring!