பல மில்லியன் டொலர் நிதி வெளிநாட்டு தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டமை விளக்கம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு சொந்தமான நிறுவனமொன்றில் பணியாற்றிய நபரொருவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவில் சேவையாற்றுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வா ஒப்புக்கொண்டார்.

இங்கிலாந்து விஜயத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பல மில்லியன் டொலர் நிதி வெளிநாட்டு தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டமை குறித்து விளக்கமளிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதி செய்தார்.

Sharing is caring!