பவுன்சர் தாக்கி வலியால் துடித்த பாகிஸ்தான் வீரர்… அருகே சென்று இந்திய பந்துவீச்சாளர் செய்த செயல்: குவியும் பாராட்டு

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரரிடம் இந்திய வீரர் காட்டிய நற்பண்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Potchefstroom மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்து களமிறங்கி விளையாடி வருகிறது.

2வது ஓவர் வீசிய இந்திய வீரர் சுஷாந்த் மிஸ்ரா, பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்டகாரர் முஹம்மது ஹுரைரா விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, 4வது ஓவரில் சுஷாந்த் மிஸ்ரா வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் துடுப்பாட்டகாரர் ஹைதர் அலி இடது தோள்பட்டையில் தாக்கியது.

வலியால் தவித்த ஹைதர் அலிக்கு அருகே சென்ற சுஷாந்த மிஸ்ரா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? என நலம் விசாரித்துள்ளார்.

எதிரணி வீரருடன் நற்பண்புடன் நடந்துக்கொண்ட சுஷாந்த மிஸ்ராவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Sharing is caring!