பாகிஸ்தான் அணி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு ‘டுவென்டி–20’ லீக் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கின்றன. ஹராரேயில் நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டன. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

ஜமான் அபாரம்: பாகிஸ்தான் அணிக்கு ஹாரிஸ் சோகைல் (0) ஏமாற்றினார். ஹுசைன் தலாத் (30) நம்பிக்கை தந்தார். கேப்டன் சர்பராஸ் அகமது (14) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய பகார் ஜமான் (73) அரைசதம் கடந்தார். சோயிப் மாலிக் (27), ஆசிப் அலி (37*) கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 194 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஆன்ட்ரூ டை 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஷார்ட் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் (16) சுமாரான துவக்கம் தந்தார். டிராவிஸ் ஹெட் (7), மேக்ஸ்வெல் (10), மட்டின்சன் (5) ஏமாற்றினர். ஷார்ட் (28) ஆறுதல் தந்தார். ஸ்டாய்னிஸ் (16), ஆஷ்டன் அகார் (11) சோபிக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அலெக்ஸ் கேரி (37), ஆன்ட்ரூ டை (12) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் ஷா அப்ரிதி 3 விக்கெட் கைப்பற்றினார்.

Sharing is caring!