“பாக்., கிரிக்கெட் அணியை தனிமைப்படுத்த தடை செய்யணும்”

புதுடில்லி:
தனிமைப்படுத்த வேண்டும்… பாகிஸ்தான் அணியையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

”நிறவெறி பிரச்னையில் தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டது போல, பாகிஸ்தான் அணியையும் தனிமைப்படுத்த வேண்டும்,”என, பி.சி.சி.ஐ., நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் வலியுறுத்தினார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து உலக கோப்பை லீக் போட்டியில் (ஜூன் 16, மான்செஸ்டர்) இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில், ”பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியை புறக்கணிப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்குப்பதில், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். இவர்களுடன் எந்த ஒரு நாடும் கிரிக்கெட் தொடர்பு வைக்கக்கூடாது.

நிறவெறி பாகுபாடு காட்டியதால் 1970-1990 வரை தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதிக்கப்பட்டது. எவ்விதமான சர்வதேச போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. இதைப்போல, பாகிஸ்தான் அணியையும் மாற்ற வேண்டும். துபாயில் நடக்கவுள்ள ஐ.சி.சி., காலாண்டு கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்துவோம்,” என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!