பிக் பேஷ்: அடியெல்ட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின், 36ஆவது லீக் போட்டியில் அடியெல்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

அடியெல்ட் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அடியெல்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியும் மெல்பேர்ன் ஸ்டாஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெல்பேர்ன் ஸ்டாஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேர்ன் ஸ்டாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மெடின்சன் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும் ஸ்டொயினிஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அடிலெய்ட் அணியின் பந்துவீச்சில், வோரால், வெஸ் அகர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கோன்வே 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அடியெல்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி, 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜொனாதன் வெல்ஸ் 36 ஓட்டங்களையும் பிலிப் சோல்ட் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மெல்பேர்ன் அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 2 விக்கெட்டுகளையும் சேம் ரெய்ன்பேர்ட், க்ளென்; மேக்ஸ்வெல், ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளை சாய்த்த வெஸ் அகர் தெரிவுசெய்யப்பட்டார்.

Sharing is caring!