பிசிசிஐயின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

தீவிரவாத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கோரிக்கை சர்சதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதிய பிசிசிஐ, தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும், ஊக்குவிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. மேலும், இந்தியா, பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், பிசிசிஐ எழுதிய கடிதம் குறித்த விவகாரம் துபாயில் நடந்த  ஐசிசி பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த விவகாரம் குறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் சிறிது நேரமே விவாதித்தார். இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ சார்பில் அமிதாப் சவுத்ரி பங்கேற்றிருந்தார்.

பிசிசிஐ அமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஐசிசி, கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்களுக்கு இடையிலான நட்புறவை பேணிக்கொள்வதிலும், உறவை துண்டிப்பதிலும் தங்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை.  பிசிசிஐ கோரிக்கை ஏற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது.

Sharing is caring!